பருவ மழையால் சளி பிடித்து விட்டதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க..!!

தற்பொழுது தமிழக முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவ மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழையால் சளி, இருமல் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர், இதை சரி செய்ய மிளகு ரசம் சிறந்த தீர்வாக இருக்கின்றது.

சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு

 • மூக்கு ஒழுகுதல்
 • மூச்சு விடுதலில் சிரமம்
 • தொண்டை வலி,
 • மூக்கடைப்பு
 • தொண்டைப்புண்
 • நெஞ்சு அனத்தம்
 • தலைவலி
 • வறட்டு இருமல்
 • தொடர் சோர்வு

தேவையான பொருட்கள்

 1. கடுக்காய்
 2. அதிமதுரம்
 3. மிளகு
 4. தேன்

செய்முறை

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கடுக்காய் அதிமதுரம் விலகு ஆகியவற்றை சம அளவு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அனைத்தையும் ஆற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பொடியாக இடித்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு தட்டில் சேர்த்து ஆறவிடவும், அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இது ஒரு டம்பளருக்கு ஊற்றிய சிறிதளவு தேன் கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் சளி பாதிப்பு உடனடியாய் குணமடையும்.

Read Previous

தீராத மூட்டுவலியா..? மஞ்சள்- புளி போதும் ஆயிசுக்கு மூட்டு வலி வரவே வராது..!!

Read Next

தொளதொளவென தொங்கும் தொப்பையை மளமளவெனக் குறைக்க இதை ஒரு கிளாஸ் பருகினால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular