
பரோட்டா சாப்பிட்ட மருத்துவ மாணவி மரணம்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!
கோவை துடியலூரை சேர்ந்த கீர்த்தனா (22) கற்பகம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். நேற்று (டிச. 01) இரவு கீர்த்தனா பரோட்டா சாப்பிட்டு படுக்கச்சென்றார். இன்று (டிச. 02) காலையில், கீர்த்தனாவை அவரது பெற்றோர் பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் விசாரிக்கிறது.