
பற்களின் மஞ்சள் கறைகள் நீங்க அசத்தலான டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நமது பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள எவ்வளவு முயன்றாலும் எப்படியாவது மஞ்சள் கறை ஏற்படுகிறது என்று புலம்புபவர்களுக்கு தான் இந்த டிப்ஸ்.
மஞ்சள் கறையை இயற்கை முறையில் எப்படி தடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கை முறையில் இதனை தடுக்க சில உணவுகள் இருக்கின்றன. ஸ்ட்ராபெரியில் உள்ள மாலிக் ஆசிட் பற்களில் காணப்படும் மஞ்சள் நிறத்தை போக்க மிகவும் உதவுகிறது. தர்பூசணிகளில் நிறைந்துள்ள சிட்ரிக் மற்றும் மாலிக் ஆசிட் கறைகளை அகற்ற உதவுகிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்களின் இயற்கை நிறத்தை பராமரித்து வலுவாக வைத்திருக்கும். ஆப்பிளில் மாலிக் ஆசிட் இருப்பதால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை குறைக்கிறது. நமது பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அடிக்கடி கேரட் சாப்பிடுவது மிகவும் நல்லது.