பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க வேண்டுமா..!! அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!

பெண்களிலிருந்து ஆண்கள் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மற்றவர் முன்பு அழகாக தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த நிலையில் நமது அழகை கெடுப்பதில் முதலாக பங்கு வகிப்பது நம் பற்கள்தான். ஒரு சிலருக்கு பல் முன்னும் பின்னும் முளைத்திருக்கும். ஒரு சிலருக்கு பல் வரிசை அழகாக இருக்கும். ஒரு சிலருக்கு அப்பட்டமாக பற்களில் உள்ள மஞ்சள் கறை தெள்ளத்தெளிவாக தெரியும். இந்தப் பிரச்சினை நம்மில் பலருக்கும் உள்ளது. இதனால், இந்த பிரச்சனை உள்ளவர்கள் சிரிப்பதற்கு கூட சற்று தயங்குவார்கள். இவ்வாறு பற்களில் உள்ள மஞ்சள் கறையை எப்படி போக்குவது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் தேங்காய் எண்ணெய் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமின்றி நமது உடல் முழுவதும் ஆரோக்கியம் தரும் பல விஷயங்களுக்கு உதவுகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பற்களில் உள்ள மஞ்சள் கரையை போக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம் தேங்காய் எண்ணெயில் சிறிது சமையல் சோடாவை கலந்து பயன்படுத்துவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை பெற முடியும்.

செய்முறை:
தேங்காய் எண்ணெயையும் சமையல் சோடாவையும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு நன்றாக கலந்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். உங்கள் பர்பசைகளுக்கு பதிலாக இதனை பயன்படுத்துவதனால் சிறந்த பலனை பெற முடியும் இதனை உங்கள் குளியல் அறையில் அல்லது பிரஷ் செய்யும் இடத்தில் வைக்க முடியும். தேங்காய் எண்ணெய் வாயின் சுகாதாரத்தை போக்கும் மற்றும் பற்கள் உள்ள மஞ்சள் நிறத்தை போக்கும். மேலும் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும் போதும் கூட தேங்காய் எண்ணெயை தடவினால் விரைவாக பலனை பெறலாம்.

Read Previous

பெண்கள் ப்ரா அணிவது அவசியமா? ஆரோக்கியமா? ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி உண்மைகள்..!!

Read Next

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular