இன்றைய காலகட்டத்தில் பலரும் பற்களில் ஏற்படும் வீக்கம் சொத்தைப்பல் பற்களில் வலி ஈறுகளில் இரத்த கசிவு இவற்றிற்கு உடனடி தீர்வு…
பல்லரனை நீங்க அடிக்கடி கற்கண்டை சாப்பிட்டு வர வேண்டும், பல்வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் வந்தால் பல்வலி நீங்கும், கோவை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் பல்வலி நீங்கும், இளம் இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வருவதன் மூலம் பல் நோயிலிருந்து விடுபடலாம், செவ்வாழைப்பழம் பற்கள் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மிகச்சிறந்த மாமருந்து, இதனை தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவதால் பல்வலி ஈறு வீக்கம் பல்லில் ரத்த கசிவு பல் சொத்தை இவைகளில் இருந்து விடுபடலாம், மாசிக்காய் பொடி செய்து நீரில் கலந்து காய்ச்சி வாய் கொப்பளித்து வருவதன் மூலம் ஈறு பலம் பெறும், குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க பேய்மிரட்டி இலைச்சாறு ஐந்து துளி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதன் மூலம் பற்கள் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும், பல் சொத்தை பற்களில் இருந்து சீழ் வடிதல் பற்கள் வலுவின்றி ஆடுவது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட பிரம்மதண்டு இலையில் சாம்பலைக் கொண்டு பற்களைத் துலக்கி வருவதன் மூலம் பல் சொத்தை பற்க்கள் இருந்து சீழ் வடிதல் பற்கள் வழுவின்றி ஆடுவது போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகும், பல் கூச்சம் ஈறு வீக்கம் நீங்க புளியங்கொட்டை தோல் கருவேலம் பட்டை தூள் உப்பு இவைகளை கலந்து பற்களை துலக்கி வருவதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும், பல் நோய்கள் குறைய ஆலமரப்பட்டை மை போல் இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குணமாகும், சொத்தைப்பல் குறைய இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தை பல் குறையும், பல்லி ரத்தம் வருவதால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க நன்னாரி வேரை வெண்ணீர் விட்டு அரைத்து குடித்தால் பற்களில் ரத்தம் வருதல் குறையும், பற்கள் வெண்மையாக இருக்க கருங்காலி பிசினை பல்பொடியாகி பயன்படுத்தி வரலாம், பற்கள் பளபளப்பாக இருக்க நாயுருவி வேர் மற்றும் சிலவற்றை சேர்த்து பொடி செய்து சலித்து பல் துலக்கி வர பற்கள் பளபளப்பாகும், பற்கள் உறுதியாக இருக்க மாதுளம் பழம் சாப்பிட்டு வரலாம், அதேபோல் புதினா பொடியுடன் தென் கலந்து சாப்பிட பற்கள் வலுவடையும், அடிக்கடி ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் பற்கள் வலுவடையும்..!!




