பலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி..!! அடிக்கடி சாப்பிடுங்க..!!
பொன்னாங்கண்ணி கீரை பல மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இதைப் பற்றி பலருக்குத் தெரியாது நிலையில் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனை சாப்பிட்டால் கண் வலி நீங்கும், பித்தப்பை கற்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. இதை சாப்பிடுவதால் கற்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். இது இருமல் மற்றும் மூச்சுத் திணறலை நீக்குகிறது. பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பொன்னாங்கண்ணி மிகவும் நன்மை பயக்கும். தோல் நோய்களிலிருந்தும் நிவாரணம் தருகிறது.