
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வுக்குப் பெண் ஒருவர் தயாராகி வந்தார். அவரை 26 வயதான நபர் ஒருவர் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து விடுதலையான 3 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.