
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த 17 பொட்டலம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் யாசர் அராபத் (39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.