பல நன்மைகளை உள்ளடக்கிய வாழைப்பூ பூரி..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

நம்மில் பல பேர் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதில் இருக்கும் நார் சத்து நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதனால் குடல் புண் இரத்த பேதி மூலநோய் ஆகியவை சரியாகும். இந்த வாழைப்பழத்தை வைத்து பூரி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 1/2 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
வாழைப்பழம் – 1
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
தயிர் – 1 டீஸ்பூன்

செய்முறை:

வாழைப்பழம் ஏலக்காய் தூள் சர்க்கரை தயிர் ஆகியவற்றை ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தை எடுத்து கோதுமை மாவு போட்டு சீரகம் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதில் அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழ விழுதை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த மாவை 20 நிமிடங்கள் ஊறவைத்து பூரி தட்டுவது போல தட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பூரி போட்டு எடுப்பது போல இதை போட்டு எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வாழைப்பழ பூரி தயார்.

Read Previous

உங்கள் முகம் பொலிவு பெற இதை செய்யுங்கள் போதும்..!! ஒரு பூவில் இருக்கும் நன்மைகள்..!!

Read Next

சித்தர்கள் கூறிய சில விசித்திர பரிகாரம்கள்..!! கண்டிப்பா தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular