பல நோய்களை தடுக்கும் அற்புதப்பழம்.! இத்தனை நாளா தெரியாம இருந்தோமே.?!

நம் நாட்டில் பல்வேறு வகையான பழ வகைகள் உள்ளது. அதிலும் ப்ளம்ஸ் என்னும் அழைக்கக்கூடிய ஒரு பழவகை ஏராளமான ஊட்டச்சத்துகளும் நன்மைகளும் கொண்டுள்ளது. இந்த பிளம்ஸ் பழம் பெண்களின் பழம் என்று கூறுவார்கள்.

இந்த ழபடம் அதிக அளவில் ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அதிக அளவு  சாகுபடி செய்து வருகின்றனர். இது இந்தியாவில் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றது. மேலும் இந்த பழம் அறிவியல் ரீதியாக ப்ரூனஸ் டொமஸ்டிகா எல்  என அழைக்கப்பட்டு வருகிறது.ப்ளம்ஸ் பழம் ரோசேசி என்ற குடும்ப வகையை சார்ந்த ஒருவகை பழம். அறிய வகையில் கிடைக்கக்கூடிய இந்த பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் பற்றி இப்பதிவில் தெளிவாய் காண்போம்.

சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் காணப்படுகிறது. இதன் வடிவம் ஒரு சிறிய பந்து போன்று, குட்டி ஆப்பிள் சைஸ்ல்  காணப்படுகிறது. இது சுமார் 40 வகைகளை உள்ளடக்கிய ஒரு பழமாகும். இதில் பாலிபினால்கள், கரோட்டினாய்டு கலவைகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. இந்த பழத்தில் சில முக்கிய வகைகள் என்னவென்றால் ரெட் பியூட்டி, பிளாக் பியூட்டி, சாண்டா ரோசா, பிளாக் ஆம்பர் மற்றும் ஆப்பிரிக்க ரோஸ்  ஆகியவை ஆகும்.

இதை சாப்பிட்டு வர சில நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. எனவே உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க இது உதவுகிறது. ப்ளம்ஸ் பழம் சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டம் மேம்படுத்தி இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

Read Previous

கண் புருவத்தை அழகாக்கும் சூப்பர் சீரம்..!!எப்படி பயன்படுத்துவது.?

Read Next

வடக்கு, மேற்கு திசையில் ஏன் தலை வைத்து படுக்கக் கூடாது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular