பல லட்சம் கொடுத்தாலும் கிடைக்காத ஆரோக்கியம்.. இந்த பழைய சோறு உண்பதால் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா..?

 

 

ஒரு நாட்டில் உள்ள மக்களுக்கு அந்த நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவு தான் சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த காலகட்டத்தில் நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாக தொடங்குவதே மக்களுக்கு மிகவும் நல்லது. வெப்பம் மிகுந்த காலகட்டத்தில் காலை உணவு பழைய சோறு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பழைய சோற்று தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் குளிர்ச்சி அடைந்து பசியை தூண்டும்.

மேலும், ஆண்களுக்கு இரவில் நீர் ஊற்றிய சொற்றை அந்த நீரோட அருந்தினால் ஆண்மை பெருகும் என்றும் கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேகத்தில் ஒரு பொலிவு உண்டாகும். மேலும் பழைய சோற்றுடன் தண்ணீர் மற்றும் சிறிதளவு மோர் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள எரிச்சல் பித்தம் போன்ற நோய்கள் நீங்கி செருமான பிரச்சனைகள் போன்றவை கூட நீங்கும் என்று கூறப்படுகிறது. பழையசோறு என்பது கட்டாயமாக 12 மணி நேரம் ஊறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் முறையான நோய்கள் ஏற்பட்டு உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாக தோன்றும். மேலும் பழைய சோறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சின்ன வெங்காயம் தான். பழைய சோறுக்கு சின்ன வெங்காயம் தான் சரியான சைடிஸ். சின்ன வெங்காயத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் கொட்டி கிடக்கிறது. சின்ன வெங்காயம் சாப்பிடும்போது பித்தவாத நோய்கள் நீங்கும். எனவே பழைய சோற்றினை நாலு வயது குழந்தை முதல் 80 வயது பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.

மேலும், இந்த பழைய சோற்றை சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் சமயத்தில் உடலுக்கு குளிர்ச்சி தேவையில்லை என்கிற சமயத்திலும் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். மேலும் பழைய சோற்றை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இயற்கையில் ஏற்படும் வெட்பம் தட்பவெப்ப நிலையில் தான் பழையசோறு ஊட்டச்சத்து மிக்க உணவாக மாறும். மற்றபடி குளிர் காலங்களில் இதை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Read Previous

ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..? பலரும் அறியாத உண்மைகள்..!!

Read Next

பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular