
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கையேடு உள்ளிட்ட சிலவற்றில் சாதி, மதம் போன்ற விவரங்கள் இடம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது.
அறிவுறுத்தல்கள்:
பள்ளிகள் மாணவர்களுக்கு ஜனநாயகம், சமத்துவம், இறையாண்மை போன்றவற்றை கற்பிக்கும் இடமாக திகழ்கிறது. மாணவர்கள் அனைவரும் சமம் என்ற நோக்கில் தான் சீருடை என்ற திட்டம் அமலுக்கு வந்தது. இந்த நவீன உலகில் பள்ளி மாணவர்களிடம் சாதி, மத ரீதியான சிந்தனையை உருவாகும் வகையில் சில பள்ளிகள் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் குறிப்பேடுகளில் சாதி, மத விவரங்களை குறிப்பிட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர மாவட்ட தலைவர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பள்ளிகல்வித்துறை உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த விவங்களை சுயவிவர குறிப்பு மற்றும் கையேட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் குறிப்பிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.