பள்ளிகள் மருத்துவமனையை தொடர்ந்து திகார் சிறைக்கும் வந்த வெடிகுண்டு விரட்டால் மின்னஞ்சல் காவல்துறையினர் தீவிரம்..!!

டெல்லியில் உள்ள ஜி டி பி மருத்துவமனை தாதா தேவா மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவமனைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விமான நிலையம் மற்றும் பள்ளிகளை தொடர்ந்து தற்பொழுது டெல்லி திகார் சிறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது இதனால் டெல்லி காவல் துறையினர் திகார் சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு வெடி குண்டும் கிடைக்கப்பெறவில்லை, இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல் துறையினருக்கு சிறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில உயர்மட்ட கைதிகள் உள்ள சிறைகள் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read Previous

சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை..!! எங்கு தெரியுமா..?

Read Next

தமிழகத்தில் அடுத்தடுத்து வரும் தேர்தல்..!! சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular