பள்ளிக்கு முன்பு விளையாடிய குழந்தைகள் கடத்தல் முயற்சி..!! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சின்ன கட்டங்குடி பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சார்ந்த மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இன்று காலை 8:30 மணிக்கு குழந்தைகள் பள்ளிக்கு வந்து வெளியே நின்று விளையாடிக்கொண்டிருந்தனர். அதே சமயம் இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக குழந்தைகளிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் குறைந்த போது மர்ம நபர்கள் 7 வயது உடைய மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளை இறுக்கி பிடித்து மயக்கம் ஸ்ப்ரே அடித்து சாக்கு முட்டைகள் திணித்து கடத்த முயற்சி செய்தனர்.

பதறிப்போன மற்ற குழந்தைகள் அலறவே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினார் கும்பலை  கண்டவாறு விரைந்து சென்றனர். இதைக்கண்ட இருவரும் சிக்கினால் நம்மை அடித்து நொறுக்கி விடுவார்களோ என்று பயந்து ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கண்டனர். மேலும் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Previous

நண்பர்களுடன் இன்பசுற்றுலா, இறுதிசுற்றுலாவான சோகம்..!! மென்பொறியாளருக்கு நேர்ந்த பரிதாபம்.!!

Read Next

மாணவர்களே உஷார்..!! இலவச லேப்டாப் வாங்குவதாக மோசடி..!! வாட்ஸப்பில் வைரலாகும் லிங்க்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular