இன்றுஒருதகவல் 🫠🤗🩷
பள்ளிப் பேருந்திற்கு மற்ற நிறங்களை தேர்ந்தெடுக்காமல் ஏன் மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது? அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? தெரிந்து கொள்ளலாம்
பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் உள்ளதற்கு அறிவியல் காரணம் உள்ளது. மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிகம் தெரியும். ஆகவே விபத்துகளை தவிர்க்க பள்ளி பேருந்துகளுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்படுகிறது. சிவப்பு நிறம் நீண்ட அலைநீளம் மற்றும் 650 நானோ மீட்டர்களை கொண்டது. இதன் விளைவாக, தொலைதூரத்திலிருந்து சிவப்பு நிறத்தை நம்மால் காண முடியும். ஆனால் மஞ்சள் நிறத்தின் அலைநீளம் வெறும் 580 நானோ மீட்டர்கள் மட்டுமே.இருந்தபோதும் பள்ளிப் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால், மஞ்சள் நிறத்திற்கான லேட்டரல் பெரிஃபெரல் விஷன்(எல்பிவி) சிவப்பு நிறத்தை விட 1.24 மடங்கு அதிகம். இதன் விளைவாக, அதன் பார்வை சிவப்பு நிறத்தை விட அதிகமாக உள்ளது.இதனால் மஞ்சள் நிறத்தை மழை மற்றும் மூடுபனியில் கூட நம்மால் தூரத்தில் இருந்து எளிதில் பார்க்க முடியும். எனவே பள்ளி வாகனம் நம் கண்ணில் படாவிட்டாலும் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் எளிதில் கண்டு பிடிக்க முடியும். அதனால்தான் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன..