செங்கல்பட்டு அருகே மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுனர் வேலன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் 7 வயது மகன் கடத்தப்பட்ட செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேலன் இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 11 வயதில் ஒரு மகள்,7 வயதில் ஒரு மகன் குடும்பத்தில் உள்ளனர்.
வேலனின் குழந்தைகள் இருவரும் ஓலலூர் ஒரு அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது காரில் வந்த இரண்டு மர்மன் அவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து பள்ளியின் ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அதற்கிடையே வெளியான ஒரு தகவலின் படி வேலவனுக்கும் அவரின் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருவது தெரியவந்தது.
இதன் காரணமாக வேலவனின் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்றாரா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை தீவிரபடுத்தி உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. குழந்தைகள் கடத்தப்பட்ட பள்ளியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.