
வருவாய் குறைவால் வழி இல்லாத துயரம் ஓசூர் தூய்மை தொழிலாளிகளின் சிறார்கள் கல்வி அறிவுக்காக குப்பை வாகனத்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் ஆனந்த் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். மாணவர்களை தினசரி பள்ளிக்கு சென்று வர குப்பை வாகனத்தில் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் 45 வார்டுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
அதில் ஆந்திர மாநிலத்தை சார்ந்த 200 குடும்பத்தினர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆனந்த் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றார்கள். அந்த பள்ளி ஆனது இவர்கள் இருப்பிடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் பள்ளிக்கு செல்லும் சாலைகளில் அதிக போக்குவரத்து இருப்பதாலும் அந்த குழந்தைகளுக்கு தெலுங்கு மொழி மட்டுமே தெரியும் என்பதாலும் வாகனங்களில் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் குறைவாக உள்ள காரணத்தால் அந்த குழந்தைகள் குப்பை வாகனத்தில் ஏறி பள்ளிக்கு சென்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.