திருநெல்வேலி விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீர் சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்ற மாணவர் சக மாணவரை வெட்டியுள்ளார்.