பள்ளிவாசல் நோன்பு கஞ்சி வீட்டிலேயே பண்ணலாம்..!! அதே சுவையில் மணக்க இப்படி செஞ்சி பாருங்க..!!

பொதுவாக ரமலான் மாதம் துவங்கிவிட்டால் இஸ்லாமியர்கள் அனைவரும் பகலில் எதுவும் சாப்பிடாமல் விரதமிருந்து மாலை நேரத்தில் நோன்பு திறக்கும்போது இந்த ஆரோக்கியமான நோன்பு கஞ்சியை பருகுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த முறையில் நோன்பு கஞ்சியை குடிக்கும் போது அவர்கள் உடல் நீர் இழப்பு ஏற்படாமல், ஊட்டச்சத்துடன் சக்தியோடு இருக்கும் என்பது அவர்களின் ஐதீகம். தற்போது இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை கீழே விரிவாக காணலாம்.

முதலில் அரை கப் பச்சரிசி மாவு மற்றும் கால் கப் பாசிப் பருப்பை நன்கு கழுவி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்பு பெரிய குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூடு பேஸ்ட் போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளியையும் சேர்த்து வதங்கவிட வேண்டும். அதன்பின்பு உப்பு, மிளகு தூள், குருமா மசாலா போன்றவற்றை சேர்த்து கிளறி, அதில் கழுவிய அரிசி, பருப்பை சேர்த்து 4 கப் தண்ணீரை ஊற்றி, மூடியை போட்டு 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். (இந்த நேரத்தில் இறைச்சியை கலந்து சாப்பிட விரும்பினால் அதையும் கலந்து கூடுதலாக 5 நிமிடம் வேக வைக்கலாம்.) பின்னர் 3 விசில் வந்தவுடன், தேங்காய் பால்,கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி தயார்.

Read Previous

IPL 2025: மும்பை ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பும்ரா..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Read Next

ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படியொரு பிள்ளை இருக்கும்..!! உண்மை பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular