
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ஒலக்காசி கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளியில் 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி பூமிகா என்பவர் கழிப்பறைக்கு சென்று உள்ளார்.
அங்கு பாம்பு ஒன்று மறைந்திருந்து உள்ளது, பாம்பு மாணவியின் கால்களில் தீண்டி விடவே அலறியடித்து மாணவி வெளிய வந்து உள்ளார். இதை தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து மாணவி உடல் நலத்துடன் உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பள்ளி கழிப்பறையில் மாணவியை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.