பள்ளி சென்ற மாணவி.. வீடு திரும்பும்போது பைக் மோதிய விபத்து..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலி கவுண்டனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் கீர்த்தி (09). இவர் நேற்று (25.06.2024) பள்ளிக்கூடம் சென்று விட்டு தனது ஊருக்கு செல்வதற்காக அய்யர்மலை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் கிருஷ்ணன் என்பவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து மோதியதில் கீர்த்தி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து கீர்த்தி திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து குறித்து கீர்த்தி தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

Attukal Paya | உடல் அலுப்பை போக்கும் ஆட்டுக்கால் பாயா..!! செய்முறை உள்ளே..!!

Read Next

பொறியியல் படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை..!! ஜூன் 28 கடைசி நாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular