பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிந்ததும், வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) முதல் அக்டோபர் 2ம் தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
காலாண்டு விடுமுறைக்குப் பின்னர், வருகிற அக்டோபர் 3ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை முன்னரே அறிவித்திருந்தது . இந்த நிலையில் காலாண்டு விடுமுறை தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவித்தப்படி விடப்படும், நீட்டிப்பது குறித்து துறை சார்ந்து பேசி முடிவெடுக்கப்படும் ‘ என்று தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது, விடுமுறை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




