தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வழங்கப்பட இருக்கிறது…
தமிழ் மொழி மற்றும் இலக்கிய திறனறிவு தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும், தமிழ் மொழி மற்றும் இலக்கிய திறனாய்வு தேர்வுக்கு 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர் மேலும் இந்த தேர்வை எழுதுவதற்கு அரசு மற்றும் தனியார் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம், மேலும் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 19 தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும், பத்தாம் வகுப்பு தமிழ் வழி பாடத்திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படும், இதில் தேர்ச்சி பெற்ற 1500 மாணவர்களுக்கு மாதம் தோறும் 1800 என வழங்கப்படும், மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 1500 ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் வழங்கப்படும், இவர்கள் விண்ணப்பிப்பதற்கு இணையதள பக்கத்தில் www.dge.tn.gov.inல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்..!!