பள்ளி மாணவர்கள் மோதல்..!! ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..!!

திருச்சியில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தடுக்கச் சென்ற ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 3:30 மணியளவில் மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு சரமாரியாக இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டுள்ளனர். அப்பொழுது தற்காலிக பணியிலிருந்த சிவகுமார் என்ற ஆசிரியர் அதனைத் தடுக்க முயன்றுள்ளார். அதில் மாணவர்கள் சிலர் அரிவாளால் சிவகுமாரை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக மீட்கப்பட்ட சிவகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் போதிய பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக பெற்றோர்கள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்த நிலையில் பலமுறை இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து அலட்சியப் போக்கே இருந்து வந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆசிரியரும் அரிவாளால் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Previous

இன்னும் பலருக்கு தெரியவில்லை ஆண்ட்ராய்டு போனில் உள்ள அந்த சிறிய ஓட்டையில் பயன் என்னவென்று..!!

Read Next

துறையூர் அருகே விவசாயி குத்திக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular