பள்ளி மாணவியிடம் சில்மிஷம்..!! பெற்றோர் உறவினர்கள் சேர்ந்து தர்ம அடி..!!
சேலம்: சத்திரம் செல்லும் பகுதியில் 50 வயது நபர் ஒருவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்றிரவு 15 வயது மாணவி ஒருவர் சென்றுள்ளார். கடையில் இருந்த நபர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, அழுது கொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறினார். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் ஜெராக்ஸ் கடைக்கு வந்து அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பள்ளப்பட்டி போலீசார், அந்த நபரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.




