
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் குறைந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணம் உணவு பழக்க வழக்கங்கள் தான். ஆரோக்கியமான உணவையும் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதற்கு நாம் தவிர்க்கிறோம். இந்நிலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களையும் அதன் சத்துக்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதுளை இந்தப் பழம் ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்தத்தின் மோசமான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.ரத்தம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும்பழமாகவும் உள்ளது. இதிலுள்ள ஆண்டிஆக்சிடண்ட்கள் சர்க்கரை நோயாளிகளை தொந்தரவு செய்வதில்லை.
பேரிக்காய் பழம் சாப்பிடுவதன் மூலம்பற்கள், எலும்புகள் பலப்படும். இதயம் வலுவாகும், இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் வலுப்பெறும். நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம்கல்லீரல் கோளாறு நீங்கும். குடல்புண்ணை அகற்றும். நீரிழிவுக்கு அருமருந்து.
எலுமிச்சை இந்த எலுமிச்சையை ஜூஸ் ஆகவோ அல்லது சாதமாகவோ செய்து சாப்பிடுவதன் மூலம் கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
கொய்யாப்பழம்செரிமானத்துக்கேற்ற நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவர். இப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால்ரத்த விருத்தியாகும். சருமம் பளபளப்பாகும். கண் கோளாறுகள் வராது. இருமல், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.
சாத்துக்குடி சாப்பிட்டால் இதுபசியைத் தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத்திற்கு நல்லது. கர்ப்பப்பையை பலமாக்கும்.பப்பாளி பழம்சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து, நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
சீதாப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும். பேன், பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். குளிர்காய்ச்சல் நீங்கும். இதயம் பலப்படும்.ஆரஞ்சு பழம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வாழ்நாளில் இளமைக்காலத்தை நீட்டிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும், பல் சொத்தை வராது.