பழநியில் இடும்பன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை..!!

பழனி சிவகிரிப்பட்டியில் இடும்பன் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் இடும்பன், கடம்பன், முருகப்பெருமானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 26 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முடிவு செய்தது. நேற்று காலை 7.45 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் அவை கோவில் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Read Previous

பெருமாள் கோவில்களில் வழிபடும் முறை..!!

Read Next

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular