பழனி குடமுழுக்கு விழாவை ஒட்டி பழனி மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

பழனி குடமுழுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.

பழனி குடமுழுக்கு விழாவை ஒட்டி பழனி மதுரை இடையே முன்பதிவி ல்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 90-க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவுக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பாத விநாயகர் கோவில் முதல் படிபாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் சன்னதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் குடமுழுக்கு நாள் வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தங்கத்தேர் புறப்பாடும் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜனவரி 26, 27 , பிப்ரவரி 3,4,5 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சோழவந்தான் கொடைக்கானல் ரோடு ஒட்டன் சத்திரம் ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 26 மற்றும் பிப்ரவரி 3,4,5 அன்று மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி சேரும். பழனி மதுரை ரயில் பழனியில் இருந்து மதியம் 02.30மணிக்கு புறப்பட்டு மாலை ௫ மணிக்கு மதுரை சேரும்.

Read Previous

ஈரோடு மாவட்டம் சென்னி மலையில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Read Next

வேலையில்லாத இளைஞர்களுக்கு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000..!! திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி அளிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular