பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் சேதம்..!! அபசகுனம்?.. பீதியில் மக்கள்..!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் ராஜகோபுரம் உச்சி சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பழனி மலைக் கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் கொம்பு போன்ற உள்ள கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என வல்லுநர்கள் குழு ஆய்வு கொண்டு வருகிறது. மேலும் பழனி கோவில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் ராஜகோபுரம் உச்சியில் சேதம் ஏற்பட்டதால் ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.