வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழியை காலம் காலமாக நம் முன்னோர் காலத்தில் இருந்து முற்போக்கு சிந்தனை காலம் உருவாகும் பட்சத்தில் கூட இந்த பழமொழி தவழ்ந்து கொண்டு தான் வருகிறது, ஆம் வாய்விட்டு சிரிப்பதன் மூலம் நோய்கள் பல நம் உடலை விட்டு விலகுகிறது…
சிரிக்க கற்றுக் கொண்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், அவை மருத்துவரின் கூற்று மட்டுமல்ல மனிதர்களின் கூற்றும் கூட எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் எவ்வளவு மன உளைச்சல்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து தங்களால் சிரிக்க முடிந்தால் உடலில் ஏற்பட இருக்கும் நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும், தினமும் வயிறு குலுங்க பத்து நிமிடம் சிரிப்பதன் மூலம் நமது உடம்பில் உள்ள அட்ரினல் என்ற சுரபி நமது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர், மேலும் வாய்விட்டு சிரிப்பதன் மூலம் நமது உடலில் நோய்கள் வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் போக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று கூறுகின்றனர் தினந்தோறும் வாய்விட்டு சிரிப்போம் நம் உடலை நோய் விட்டு பறப்பதற்கு..!!