பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?..

பழைய காலத்தில் பெரியவர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு சின்ன சின்ன கைவைத்தியங்கள் செய்தார்கள் அது என்னவென்று தெரியுமா?

 

1)தீராத விக்கலை நிறுத்தஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்

 

விரல்களால்அடைத்துக்கொள்ளுங்கள்.நின்று போகும் தீராத விக்கல்!

 

2) ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டு

 

சுவையுங்கள்பறந்து போகும் விக்கல்!

 

3) கொட்டாவியை நிறுத்தகொட்டாவி வருவதற்கான காரணம்Oxigen பற்றாக்குறை தான்.ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.

 

4) உடல் துர் நாற்றத்தைப்போக்க நீங்கள்குளிக்கும் போது தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்.நாள் முழுக்க புத்துணர்வுடன்இருக்கலாம்

 

5) வாய் துர்நாற்றத்தால் கஷ்டமாக உள்ளதா கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புசேர்த்து குடித்து வந்தாலும்,வாயைக் கொப்பளித்து வந்தாலும்வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

6)தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா பயப்பட வேண்டாம். வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

 

7)வேனல் கட்டி தொல்லையா கவலை வேண்டாம் வெள்ளைப் பூண்டை நசுக்கிசிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

 

8) மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

 

9) நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

 

10)சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

 

11) சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

 

12) புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

 

13) மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

 

14) சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

 

15)பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

Read Previous

முடிவே இல்லாத காதல் கதைகள் இன்னும் பலர் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..!!

Read Next

உங்கள் நேரத்தை தடுக்கும் நுட்பத்தை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் : பயனுள்ள தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular