பழைய ரூல்ஸ் எல்லாம் இனி செல்லாது..!! தமிழக பதிவுத்துறை அதிரடி..!!

தமிழகத்தில் சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் சமீப காலத்தில் போலி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  போலி பத்திரங்கள் மூலம் எளியவர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பல இடங்களை அபகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்புகளை வகைப்படுத்தி, பட்டியல் வடிவில், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை அனுப்பிய விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய், இரண்டாம் தளம், 10,695 ரூபாய், 3 வது தளம், 10,870 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரைதளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3 வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும், 10.7 சதுர அடிக்கு, 163.30 ரூபாய் என்ற அடிப்படையில் மதிப்பு உயரும். இதேபோன்று கட்டுமான பொருட்களின் அடிப்படையில், கட்டடங்களுக்கான பல்வேறு நிலை மதிப்புகளையும் பதிவுத்துறை பட்டியலிட்டுள்ளது.

Read Previous

குட்டி கதை..!! மனக்கவலையை விட்டொழியுங்கள்..!! மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும்..!!

Read Next

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! சிறுவன் உள்பட 2 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular