பஸ்சுக்காக காத்திருந்த வாலிபரிடம் செல்போன் பணம் பறிப்பு..!!

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் மட்டும் இன்றி நள்ளிரவும் வெளியூர்களுக்கு செல்ல பஸ் நிலையத்தில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இன்று அதிகாலையில் நெல்லைக்கு செல்வதற்காக வாலிபர் ஒருவர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென பஸ்சுக்காக காத்திருந்த அவரிடம் தகராறில் ஈடுபட்ட னர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை யும், செல்போனையும் பறித்தனர். இதையடுத்து அந்த வாலிபர் கூச்சலிட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் துரத்தினார்கள். சிறிது தூரம் துரத்தி சென்று வாலிபர்கள் இருவரையும் பிடித்தனர்.
பிடிபட்ட இருவரையும் பஸ் நிலையத்தில் அமர வைத்தனர். பின்னர் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த 2 வாலிபர்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் வாலிபர்கள் இருவரும் வடசேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட வாலிபர்களுக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிகாலை வேளையில் பஸ் பயணியிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் வடசேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வடசேரி பஸ் நிலையத்தில் தொடர்ந்து திருட்டு சம்ப வங்கள் நடைபெற்று வரு கிறது. பஸ் நிலையத்தில் உள்ள சி. சி. டி. வி. காமிராக்கள் செயல்படாத நிலையில் உள்ளது. மேலும் இரவு ரோந்து பணிக்கும் போலீசார் இல்லாத நிலை நீடித்து வருகிறது. அங்குள்ள புறக்காவல் நிலையத்திலும் போலீசார் இல்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை 24 மணி நேரமும் செயல்பட வைப்பதுடன் அங்குள்ள சி. சி. டி. வி. காமிராக்களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read Previous

’ காவி நிறத்தில் இயங்க போகும் ரயில்கள் ’..! மத்திய ரயில்வே துறை அமைச்சர் சொன்ன காரணம்..!!

Read Next

பிணமாக மீட்கப்பட்ட நர்சரி பண்ணை அதிபர் கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular