பஸ் மீது மோதிய லாரி – 6 பேர் பலி..!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. 6 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read Previous

இந்தியா – அமெரிக்கா உறவு வலிமையாக உள்ளது…வெள்ளை மாளிகை அறிக்கை..!!

Read Next

நடிகராக அறிமுகமாகும் தோனி?..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular