பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய குர்ரம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலின் பேரில் பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லக்கி மர்வத் பகுதியில் ஒரு தலிபான் தளபதி உயிருடன் பிடிபட்டார்.




