
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வு..
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பகதுன்வாக் மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் நடைபெற்றது. ஜேயுஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கட்சி கூட்டத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதல் கட்டமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி இருந்தது. தற்போது பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்து இருக்கிறது.
மேலும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேற்பட்டதாகவும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆகவும் உள்ளது. காயம் அடைந்தவர்களின் பெஷாவர் மற்றும் டைமர் கெரா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தற்கொலைப் படை தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை எந்த அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. மேலும் சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அலுவலகம் அறிக்கை அளித்துள்ளது.