
பாகிஸ்தான் சீமாவைப் போல் சர்ச்சையை கிளப்பும் பங்களாதேஷ் ஜூலி..!!
பாகிஸ்தான நாட்டைச் சார்ந்த சீமா ஹைதர் என்ற பெண்மணி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற இளைஞருடன் பப்ஜி மூலமாக காதல் வளர்த்து தற்போது சட்ட விரோதமாக இந்தியாவிற்கு நுழைந்து தனது காதலனை கரம் பிடித்துள்ளார். நான்கு குழந்தைகளுடன் சச்சினை கரம்பிடித்த சீமா எனது கணவர் இந்தியன் எனவே நான் இந்து என்று கூறி தற்போது பல சர்ச்சைகளுக்கு வித்திட்டார்.
இவர் பாகிஸ்தான் உளவு பிரியை சார்ந்த பெண்மணி என்று கூறி அவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது. மற்றொருபுரத்தில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியா சீமாவை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கவில்லை எனில் தாக்குதல்கள் நடைபெறும் என்று கூறி பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை தாக்கி வருகின்றது.
இந்த நிலைமையில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஜுலி என்பவர் உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை முகநூலில் காதலித்ததகாகவும் அவரை கரம்பிடித்து தனது 11 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மை அஜயின் குடும்பத்தினருக்கு தெரியாத நிலையில் தற்போது ஜூலியின் பாஸ்போர்ட் காலாவதி தேதி வந்ததால் அதனை நிறைவு செய்ய வங்கதேசம் செல்ல வேண்டி இருந்துள்ளது. இந்த உண்மையை அறிந்த தாய் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.