
இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டில் மாவு அரைத்து இட்லி தோசை ஊற்றி சாப்பிடுவது கிடையாது அதற்கு பதிலாக கடையில் விற்கக்கூடிய இட்லி மாவுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் கடையில் வாங்கக்கூடிய இட்லி மாவினால் ஏற்படும் தீமைகளை மக்கள் அறிவதே இல்லை, அவற்றில் ஏற்படும் தீமைகளை பற்றி நாம் காண்போம்…
பாக்கெட் மாவில் புளிப்பு வாசனை வராமல் இருக்க புண்ணுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் தடவப்படுகிறது, இதனை சாப்பிட்டால் குடலில் பாதிப்பு வயிற்று வலி வயிற்று உபாதைகள் அஜீரண கோளாறுகள் ஏற்படும், கடைகளில் விற்கப்படும் மாவு எந்த தண்ணீர் ஊற்றி அரைக்கப்படுகிறது என்பது தெரியாது அசுத்தமான தண்ணீரை பயன்படுத்தும் போது அதில் ஈக்கோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும், மேலும் இதனால் நாள்பட்ட வயிற்று வலி உடல் வறட்சி இரைப்பை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் என தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் அரிசி மாவில் உளுந்தை குறைத்துக் கொண்டு மரவள்ளி கிழங்கின் கழிவுகளை அதிகம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது..!!