
பாக்கெட் மாவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறார்களா என்றால் கேள்வி குறிதான். பலரும் ரெடிமேட் உணவுகளை சாப்பிடுவதில் தான் அதிகமாக ஆர்வம் கொள்கிறார்கள். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சப்பாத்திகளை ரெடிமேட் பரோட்டா என இதை வாங்கி சாப்பிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகிறார்கள். அது போன்று தான் வீட்டில் மாவு அரைப்பது என்பது குறைந்து கொண்டே வருகிறது. கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் இட்லி மாவை வாங்கி உணவு தயாரிக்கின்றனர். இதில் உள்ள ஆபத்து பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த நிலையில் பாக்கெட் மாவை விற்பனை செய்வோர் அதன் புளிப்பு தன்மையை நீக்குவதற்கு போரிக் ஆசிட் என்ற ஒரு பொருளை அந்த மாவில் சேர்க்கின்றனர். இந்தப் போரிக் ஆசிட் எனப்படுவது நமது உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக தடவப்படும் ஒரு மருந்தாகும். இதை சாப்பிடுவதன் மூலம் நமது உடல் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். இதனை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் அஜீரண கோளாறு வயிறு சம்பந்தமான பிரச்சனை குடல் பாதிப்பு மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாவு எந்த நீரை பயன்படுத்தி அரைக்கப்படுகிறது எந்த அரிசியை பயன்படுத்தி அரைக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்க மாட்டோம். எனவே பாக்கெட் உணவுகளையும் பாக்கெட் மாவையும் வாங்குவதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உணவை தயாரித்து சாப்பிடுங்கள்.