
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ரெடிமேட் உணவுகள் என்றாலே மிகவும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அதில் உள்ள தீமைகளை பற்றி அறிந்தும் அறியாமலும் அதை நாம் உண்கிறோம். அன்றாட வாழ்வில் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நேரத்திற்கு நேரம் சத்துள்ள உணவுகளை சமைத்து சாப்பிடுவது என்பது பலர் வீட்டிலும் சவாலாக தான் உள்ளது. இந்நிலையில், மக்கள் அனைவரும் ரெடிமேட் உணவுகளான ரெடிமேட் சப்பாத்தி ரெடிமேட் இட்லி மாவு ரெடிமேட் பரோட்டா ஏன் ரெடிமேட் பிரியாணி வரை அனைவரும் ரெடிமேட் உணவுகளுக்கு தான் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கின்றனர். இதனால் உடலுக்கு பல தீமை வர வாய்ப்புள்ளது. இந்த ரெடிமேட் உணவுகள் நகரங்களில் வணிக வளாகத்தில் விற்பனை செய்யப்படுகிறது அந்த வகையில் நமது ஊர்களில் மாவு பாக்கெட் விற்பனை செய்யும் வியாபாரம் சமீப காலமாக அதிகமாக வருகிறது. ஏனெனில் அன்றாடம் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வருவோர் எளிமையாக இட்லி அல்லது தோசை செய்து சாப்பிடுவதற்கு இந்த ரெடிமேட் மாவை தேர்வு செய்கின்றனர் இந்நிலையில் பாக்கெட் மாவை வணிக ரீதியாக விற்பனை செய்வோம் அதன் புளிப்பு தன்மையை நீக்க போரிக் ஆசிட் கேட்கின்றனர். இந்தப் போரிங் ஆசிட் என்பது புண்களுக்கு தடவப்படும் ஒரு மருந்தாகும். இதனை சாப்பிட்டால் குடல் புண் ஏற்பட்டு அஜீரண கோளாறு ஏற்படும். மேலும் இந்த பாக்கெட் மாவு எந்தவிதமான நீரில் அரைத்து நமக்கு வழங்கப்படுகிறது என்பதை பற்றி நமக்கு சுத்தமாக தெரியாது. அசுத்தமான நீரை பயன்படுத்தி அழைக்கப்படும் மாவை சமைத்து சாப்பிட்டால் நாள்பட்ட வயிற்று வலி உடல் வறட்சி இழப்பை நோய்கள் போன்ற பெரிய பெரிய நோய்களுக்கு நாம் உள்ளாவோம். அதேபோல, சில நேரம் குளித்த விற்பனை செய்யப்படாத மாவுகளை கூட ஃப்ரிட்ஜில் வைத்திருந்து நமக்கு விற்பனை செய்கிறார்கள். அதை நாம் வாங்கி இட்லி அல்லது தோசை ஊற்றி சாப்பிடும் போது தான் தெரியும் அந்த புளிப்பின் அருமை. இதனால் நம் உடலில் பல உபாதைகள் ஏற்படும்.