
பாசிப்பருப்பில் இட்லி சாம்பார் செய்யும் போது நேரம் ஆக ஆக கெட்டியாகி விடுகிறதா..?? இதனை தவிர்ப்பது எப்படி..??
தினசரி வாழ்க்கையில் இரவில் டிபன் காலையில் டிபன் மதிய நேரத்தில் மட்டும்தான் சாப்பாடு என பல வீடுகளில் சாப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாசிப்பருப்பு சாம்பார் இட்லி, தோசை சாதம் என அனைத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும். இந்த பாசிப்பருப்பு சாம்பார் வைக்கும் போது சுவையாகவும் ருசியாகவும், சாம்பார் பதத்திலேயே இருக்கும். ஆனால் நேரமாக ஆக ஆக பாசிப்பருப்பு சாம்பார்கெட்டியாகி விடும். இதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாசிப்பருப்பில் சாம்பார் வைக்கும் போதே நீர்க்க வைத்து கொள்ளவும். மேலும் பாசிப்பருப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளலாம். குக்கரில் வேகவைப்பதற்கு பதிலாக பாசிப்பருப்பை பாத்திரத்தில் வேகவைத்து சாம்பார் செய்யும்போது எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டி ஆகாமல் நன்றாக இருக்கும். இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இதையே பாலோ பண்ணி பாருங்க.