
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது ஆனால் திமுக கூட்டணியில் விரிசலா அதிமுக மீண்டும் பாஜகடன் கூட்டணி என்ற பேச்சுகள் இப்போது எழ தொடங்கியுள்ளது, இத்தகைய சூழலில் நேற்று செய்தியாளிடம் பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு…
அதில் அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம் பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாராக என்று கேட்கிறீர்கள் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது என்று கூறியிருந்தார், இந்த நிலையில் பாஜக விவகாரத்தில் கட்சியை நிலைப்பாடு தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார், செய்தியாளரிடம் பேசுகையில் இதனை தெரிவித்து பேசிய ஜெயக்குமார் அதிமுகவை பொருத்தவரையில் எந்த காலத்திலும் மறைமுக கூட்டணி கிடையாது, கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை இதை தான் நேற்று பொது செயலாளர் தெளிவாக சொல்லி இருக்கிறார், பாஜகவை தவிர்த்து திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்கள் எங்களுடன் வரும்போது அது பற்றி கட்சி முடிவு செய்யும் இதனை திசை திருப்பி விவாத பொருளாக்கி ஆதாயம் தேடும் முயற்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை இந்த நிலைப்பாடு தொடரும், எதிர்காலத்திலும் இது தொடரும் இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்..!!