
கன்னியாகுமரி மாவட்டம் உதய மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் பால் இவர் பாலப்பள்ளம் பேரூராட்சி பாஜக தலைவராக உள்ளார், இவர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சஜூவ் , சேம்சன் ஆகியோர் சாலை ஓரம் நின்று மது அருந்திக் கொண்டு இருந்தனர். இதனை சுந்தர் பால் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட சஜுவ் மற்றும் சேம்சன் ஆகியோர் சுந்தர் பாலை சரமாரியாக தாக்கி உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.