
திருச்சி சூர்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு தற்சமயம் ஒரு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசி உள்ளார்.
அப்போது அவர் யூடியூப் சேனலில் பேசியது “அண்ணாமலைக்கு ஐபிஎஸ் பயிற்சி பொழுது அரசியலில் ஆசை ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை தேமுதிக தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவரது இல்லத்தில் சென்று சந்தித்து தான் தேமுதிகவில் இணை விரும்புவதாக அவரிடம் கூறினார்.
அதற்கு விஜயகாந்த் நல்ல பதவியில் இருக்கிறீர்கள், நீங்கள் நல்ல இடத்தை அடைந்துள்ளீர்கள். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே அதிகாரத்தில் தான் உள்ளீர்கள். கஷ்டம் என வருபவர்களுக்கு உதவி செய்யுங்கள்., சட்ட ஒழுங்கை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். அதன் பின் அண்ணாமலைக்கு பாஜகவின் மூத்த நிர்வாகி பி எல் சந்தோஷ் தொடர்பு கிடைக்க அவர் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய முடி எடுத்தார். அதன்படி பதவி ராஜினாமா செய்த பின் ஒரு வருடம் கழித்து தான் பாஜக மாநில துணைத்தலைவர் பதவியும், பாஜக மாநில தலைவர் பதவியும் தற்போது கிடைத்துள்ளது”, என அவர் தெரிவித்துள்ளார்.