பாடாய்படுத்து மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? இரவு தூங்கும் செல்லும் முன் இந்த மூலிகை எண்ணெயை தடவி பாருங்கள்..!!

மூட்டு எலும்பின் நடுவில் தேய்மானம் ஏற்படும்போது வலி ஏற்படக்கூடும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாக முன்பு இருந்த நிலையில் தற்பொழுது ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் வயதானவர்களை காட்டிலும் இளைய வயதினேரியின் பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது.

இந்த மூட்டு வலிக்கு வலி நிவாரணி, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தற்காலிகமாக வலி குறையுமே தவிர அவை நிரந்தர தீர்வாக அமையாது. இதற்கு இயற்கை வைத்தியத்தை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • விளக்கெண்ணெய் 100 மில்லி
  • கடுகு எண்ணெய் 100 மில்லி
  • நல்ல எண்ணெய் 100 மில்லி
  • தேங்காய் எண்ணெய் 50 மில்லி
  • வேப்ப எண்ணெய் 50 மில்லி
  • குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி
  • உத்தாமணி இலை ஒரு கைப்பிடி
  • அஸ்வகந்தா இலை ஒரு கைப்பிடி
  • நொச்சி இலை ஒரு கைப்பிடி
  • முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி
  • பிரண்டைத் தண்டுகள் ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் குப்பைமேனி இலை, அஸ்வகந்தா இலை, முடக்கத்தான் கீரை, பிரண்டை தண்டுகள், உத்தாமணி இலை, நொச்சி இலை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்திக்கொள்ள வேண்டும், பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் வேப்பெண்ணெய் 50 மில்லி, தேங்காய் எண்ணெய் 50 மில்லி, நல்லெண்ணெய் 100 மில்லி, கடுகு எண்ணெய் 100 மில்லி மற்றும் விளக்கெண்ணெய் 100 மில்லி ஊற்றி சூடு படுத்திக் கொள்ளவும்.

பின் உலர்த்தி வைத்துள்ள இலைகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு காட்சி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறவைத்து ஒரு பாட்டிலில் மாற்றிக் கொள்ளவும். இந்த மூலிகை எண்ணெயை இரவு தூங்க செல்வதற்கு முன் மூட்டுகளின் மேல் தடவி செய்து தடவி வந்தால் விரைவில் வலி குணமடையும்.

Read Previous

பெண்களின் தலையாய பிரச்சினைகளா இருக்கும் நீர்க்கட்டி பிரச்சனையை குணம் செய்யும் வழிகள்..!!

Read Next

சொத்தைப்பல் வலியால் அவதிப்படுகிறீர்களா..? சொத்தை பல்லில் உள்ள புழுக்களை வெளியேற இவ்வாறு செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular