
பாட்டி சொல்லும் உணவு உண்ணும் விஷயங்கள்..!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்..!!
கிழக்கு நோக்கி சாப்பிட ஆயுள் வளரும். மற்றும் தெற்கு நோக்கி சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கி சாப்பிட செல்வம் வளரும்.
ஆனால் ஒருபோதும் வடக்கு நோக்கி மட்டும் சாப்பிட க்கூடாது. அளவிற்க்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. நோய் வரும் மற்றும ஆயுள் குறையும். எனவே வயிறு பசிக்க மட்டும் சாப்பிடுங்கள். உணவு உண்ணும் போது பேசக்கூடாது மற்றும் படிக்கக்கூடாது. அது மட்டும் இன்றி இடது கையை கீழே ஊன்ற கூடாது. வீட்டில் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக்கூடாது.
சாப்பிடும் போது தட்டினை கையில் எடுத்துக்கொண்டு உண்ணக்கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக்கொண்டும் உண்ணக்கூடாது. இலையை துடைத்து வலித்து சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பி சாப்பிடுவதும் தரித்திரத்தை உண்டாக்கும். சாப்பிடற விஷயத்துல இவ்வளவு இருக்கான்னு நீங்க நினைப்பீங்க அது கண்டிப்பா எனக்கு புரியுது. ஆனா கண்டிப்பா பாட்டி சொன்ன இது எல்லாத்தையும் ஃபாலோ பண்ணுங்க.