
மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததையடுத்து விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டது…!
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான போக்குவரத்து கட்டுப்பட்டு பிரிவுக்கு மிரட்டல் வந்துள்ளது. ரஷ்யாவின் பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸூர் ஏர் விமானம் கோவா நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும் போது பாதி வழியில் மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் வந்ததை தொடர்ந்து அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விமானத்திலிருந்து பயணம் செய்த 2 கைக்குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட மொத்தம் 245 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்திலும் விமானப்படை தளத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.