இந்தியாவின் உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் தெரிவித்திருப்பது “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேட் இன் இந்தியா என்ற திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய இலக்குகளை எட்டி வருகிறது, 2023- 24 ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும் 2023-24 இந்தியாவின் உற்பத்தி மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 887 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பை விட 16.8% அதிகமாகும் பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில்துறை நிறுவனங்களை நான் மனமாந்து வாழ்த்துகிறேன். உலக அளவில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு உகந்த ஆட்சியை உருவாக்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது”, என அவர் தெரிவித்துள்ளார்.