
நம் அனைவரின் வீடுகளிலும் பாத்திரங்களை சுத்தம் செய்ய நாம் ஸ்க்ரப்பர்களை தான் பயன்படுத்துகின்றோம். ஏனெனில், ஸ்க்ரப்பர்கள் பாத்திரத்தில் இருக்கும் அழுக்குகளை சற்று நேரத்தில் நீக்க உதவுகிறது. ஆனால், இதே ஸ்க்ரப்பர் நமது உடல்நலனுக்கு மிகப்பெரிய எதிரியாகவும் அமையும். அது குறித்து இந்த பதிவில் காண்போம்.
நாம் சுத்தம் செய்து முடித்த பின் ஸ்க்ரப்பர் மற்றும் ஸ்பான்ச் இடுக்குகளில் கழிவறையை விட அதிக அளவிலான பாக்டீரியா இருக்கிறது என்று ஆய்வுகளில் தகவல் வந்து இருக்கிறது. இதனால் நமக்கு லேசான முதல் கடுமையான குடல் மற்றும் தோல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஸ்க்ரப்பர்களை 1 வாரம் முதல் 2 வாரங்கள் வரை மட்டுமே பயன்படுத்தவும். சூடான நீரில் ஸ்க்ரப்பர்களை நன்கு கழுவியப் பின் வெயிலில் உலர வைத்து மீண்டும் பயன்படுத்துவது நல்லது.
உங்களின் ஸ்க்ரப்பர்கள் தேய்ந்து இருந்தாலோ அல்லது லேசான துர்நாற்றம் வீசத்தொடங்கினாலோ, உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். சிறிது அலட்சியம் போதும், உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் புரியாமல் நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும்.