
பாத்ரூமில் உள்ள டைல்ஸ் அழுக்குகளை நீக்குவதற்கு எளிமையான டிப்ஸ் இதோ..!!
சுத்தம் சோறு போடும். என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல சுத்தமாக இருப்பது நம் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இந்நிலையில் பலரும் வீட்டை அழகாக சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் பாத்ரூமில் அவ்வாறு வைத்திருக்கிறோமா என்றால் ஒரு கேள்வி குறித்தான். ஏனென்றால் பாத்ரூம் டைல்ஸ்களை கழுவுவதற்கு அனைவரும் முகம் சுழிப்போம். அதற்கு முக்கியமான காரணம் நீண்ட நேரம் கழுவ வேண்டும் ஒரு சில நேரம் கழுவியும் அழுக்குகள் போகவில்லை என்பதும் காரணம். வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பாத்ரூமையும் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் நாம் பல நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். இந்நிலையில் எளிதாக பாத்ரூம் டைல்ஸ் அழுக்குகளை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் வினிகரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து டைல்ஸ்கள் மற்றும் உப்பு கரை உள்ள இடங்களில் தெளித்துவிட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்தால் அழுக்குகள் நீங்கி பளபளப்பாக இருக்கும். மற்றும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து அந்த கலவையை உப்பு கரை படிந்த இடங்களில் தெளித்துவிட்டு கழுவினால் அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும் இந்த கலவையை உப்பு கரை படிந்த இடங்களான பாத்ரூம் மற்றும் சமையலறையிலும் கூட பயன்படுத்தலாம்.